அசந்து தூங்கும்போது மூக்கில் புகுந்த கரப்பான் பூச்சி.. அடுத்து என்ன நடந்ததுன்னு பாருங்க.. கொடுமைதான் Updated: Sunday, September 8, 2024, 18:03 [IST] பீஜிங்: அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது முதியவர் ஒருவரது மூக்கு வழியாக கரப்பான் பூச்சி சென்றுவிட்டது. முதல் நாளில் ஒன்று தெரியாத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் உள்ளே சென்ற கரப்பான் பூச்சி வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. இதனால் அந்த முதியவர் படாத பாடு பட்டுள்ளார். இதற்கு பிறகு அந்த கரப்பான் பூச்சியை அகற்றிய பின்னரே முதியவர் நிம்மதியடைந்துள்ளார். சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள ஹைகோவு பகுதியை சேர்ந்தவர் 58-வயது முதியவர் ஒருவருக்கு வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது தூங்கும் போது அவரது உடலுக்குள் புகுந்த கரப்பான் பூச்சியால் பல நாள் படாத பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- அந்த முதியவர் எப்போதும் போல தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் தூங்க சென்றார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, திடீரென அவரது வாயில் ஏதோ அசாதாரணமாக உணர்ந்துள்ளது. தூக்க கலத்தில் அதை பெரிது படுத்தாமல் இருந்துவிடடர். தூங்கி முழித்த பிறகு தொண்டையில் வினோதமாக உணர்ந்து இருக்கிறார். மூக்கு பகுதியில் ஏதோ கவ்வி பிடிப்பது போல இருந்திருக்கிறது. பிறகு இருமல் வந்துள்ளது. இருமலுக்கு பிறகு இந்த உணர்வு போய் விட்டதால், எதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்கியிருக்கலாம் என்றும் இருமும் போது நம்மை அறியாமலே அது வெளியேறியிருக்கலாம் எனவும் பெரிது படுத்தாமல் விட்டுவிட்டார். மறுநாள் தனது பணிகளை வழக்கம் போல செய்து விட்டு தூங்க சென்று பிறகு பெரிதாக இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் உள்ளே சென்ற கரப்பான் பூச்சி வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. அதாவது, மூச்சு விடும் போதெல்லாம் துர்நாற்றம் வீசியிருக்கிறது. காலையில் நன்றாக பிரஷ் செய்கிறோம்.. வழக்கமான தூய்மையை பேணுகிறோம். பிறகு எப்படி இதுபோன்று துர்நாற்றம் வீசுகிறது என நினைத்துக் கொண்டு இருந்த நேரத்தில் திடீரென இருமல் வந்தது. அப்போது மஞ்சள் நிறத்துடன் வினோதமாக மூக்கில் இருந்து வந்ததை பார்த்த அவர் அச்சத்தில் மருத்துவமனைக்கு ஓடினார். மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவமனைக்கு சென்ற அந்த முதியவரின் மேல்சுவாச பகுதியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் சிடி ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போதுதான் சுவாச குழாய் பகுதியில், வெளிப்புறப் பொருள் இருப்பதை கண்டறிந்தனர். பிரான்கோஸ்கோபி சிகிச்சை செய்து பார்த்த போது, மூச்சுக்குழாயில் இறக்கைகளுடன் எதோ ஒருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொண்டு அதை அகற்றினர். அடுத்த சில நிமிடங்களில், எந்த துர்நாற்றத்தையும் முதியவரால் உணரமுடியவில்லை. முழு உடல் நலம் பெற்று மறுநாளே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “இது அரிதான ஒரு நிகழ்வாக உள்ளது. இதுபோன்று வெளிப்புற பொருள் உடலுக்குள் சென்று இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் சுயமாக எதையும் யூகித்துக்கொண்டு இருக்க கூடாது. உடனே மருத்துவமனைக்கு சென்று பார்க்க வேண்டும்” என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block