ஆந்திராவை அதிர வைத்த பாலியல் புகார்..ஜானி மாஸ்டருக்கு அடுத்தடுத்து சிக்கல்! இனி வேலை செய்ய முடியாதே! Updated: Wednesday, September 18, 2024, 14:28 [IST] அமராவதி: ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் துறையில் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குவிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக ஆந்திர திரையுலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனரான ஜானி மாஸ்டர் மீது எழுந்திருக்கும் பாலியல் புகார் பரபரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் அவர் பணிபுரிய தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மலையாள திரையுலகில் ஆண்களின் ஆதிக்கம் மற்றும் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து விசாரிப்பதற்காக ஹேமா கமிட்டியை அமைத்து அரசு உத்தரவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் அது வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டு அந்த அறிக்கையை வெளியான பிறகு மலையாளத் திரையுலகம் புரட்டிப் போட்டது போல ஆகிவிட்டது. பல நடிகைகளுக்கு, நடிகர்களும், இயக்குனர்களும் பாலியல் தொல்லை தந்தது வெளிச்சத்திற்கு வந்தது. நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல தமிழ், தெலுங்கு, கன்னட திரை உலகில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதற்கிடையே தெலுங்கு திரை உலகின் பிரபல நடன இயக்குனராக வலம் வரும் ஜானி மாஸ்டர் மீது பரபரப்பு பாலியல் புகாரை முன் வைத்துள்ளார் ஜூனியர் பெண் நடன கலைஞர். இந்தியாவில் பிரபலமான பாகுபாலி, புஷ்பா, தமிழில் வாரிசு, பீஸ்ட் உள்ளிட்ட படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றிய ஜானி மாஸ்டர் தான் சிறுவயதில் மைனராக இருக்கும் போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அப்பெண் புகார் தெரிவித்திருந்தார். பலமுறை தன்னை ஜானி மாஸ்டர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, பல்வேறு நகரங்களில் படப்பிடிப்பின் போதும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். மேலும் ஜானி மாஸ்டரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னை வேறு எங்கும் பணியாற்ற விடமாட்டேன் என அவர் மிரட்டுவதாகவும் அந்த பெண் கூறியிருந்தார். இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டது. அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் கூட்டணி வகிக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் உறுப்பினராக இருந்த ஜானி மாஸ்டர் வழக்கு முடியும் வரை கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜானி மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையை அணுகினார். இதனையடுத்து அந்த குழு அதன் தலைவர் ஜான்சி தலைமையில் விசாரணை மேற்கொண்டது. அதில் அந்தப் பெண் பாதிக்கப்பட்டபோது மைனர் என்பதால் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெலுங்கு திரையுலகம் இந்த விஷயத்தை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதோடு, காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கும் என கூறியது. இந்த நிலையில் அடுத்த சிக்கலாக ஜானி மாஸ்டருக்கு ஒரு பிரச்சனை வந்திருக்கிறது. நடன இயக்குனர் சங்கத்திலிருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் பாலியல் புகாருக்கு உள்ளான அவர் தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block