இறங்கி வந்த ஆம் ஆத்மி.. பிடிவாதம் பிடித்த காங்கிரஸ்.. ஹரியானாவில் கூட்டணி சொதப்பியது ஏன்! பரபர தகவல் Published: Wednesday, September 11, 2024, 18:41 [IST] சண்டிகர்: ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி அமையும் என்று சொல்லப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் கூட்டணி கைகூடவில்லை. இரு கட்சிகளும் தனித்துக் களமிறங்கியுள்ளன. இதற்கிடையே அங்கு என்ன நடந்தது.. கூட்டணி அமையாமல் போக என்ன காரணம் என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வரும் அக். 8ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. கூட்டணி: ஹரியானா சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே கூட்டணி அமையும் என்றே பலரும் எதிர்பார்த்தன. லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து பயணித்த நிலையில், ஹரியானா தேர்தலிலும் அது தொடரும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். காங்கிரஸ் தலைமை இதில் நேரடியாகத் தலையிட்ட போதிலும் கூட்டணி அமையவில்லை. ஆம் ஆத்மி தனது வேட்பாளர் பட்டியலைத் தனியாக வெளியிட ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே ஹரியானா சட்டசபைத் தேர்தலில் என்ன நடந்தது கூட்டணி ஏன் அமையவில்லை என்பது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. சீட் பகிர்வில் இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதில் உடன்பாடு எட்ட முடியாமல் போனதே கூட்டணி கைகூடாமல் போகக் காரணம் எனக் கூறப்படுகிறது. என்ன சிக்கல்: ஆம் ஆத்மி கட்சிக்குக் காங்கிரஸ் ஒதுக்க முன்வந்த இடங்கள் கெஜ்ரிவாலுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையாம். அதிக சீட்களை ஆம் ஆத்மி எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் அதை ஒப்புக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. ஆம் ஆத்மி கேட்ட நம்பருக்கும் ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே விரிவான மிக நீண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 3 தொகுதிகள் தான்: ஹரியானாவில் மொத்தம் 90 சீட்கள் இருக்கும் நிலையில், முதலில் 10 தொகுதிகளை ஆம் ஆத்மி கேட்டுள்ளது. இருப்பினும், 10 தொகுதிகளுக்கு வாய்ப்பே இல்லை என ஆரம்பத்திலேயே காங்கிரஸ் மறுத்துவிட்டது. பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில், ஒரு கட்டத்தில் 5 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கேட்டது. ஆனால், அதற்கும் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை. அதிகபட்சம் 3 தொகுதிகள் மட்டுமே முடியும் எனக் கறார் காட்டிவிட்டதாம். அந்த 3 தொகுதிகளும் கூட ஆம் ஆத்மி விரும்பிய தொகுதிகளைத் தரத் தயாராக இல்லையாம். பாஜக ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதிகளை மட்டுமே ஆம் ஆத்மிக்கு ஒதுக்கக் காங்கிரஸ் ஓகே சொல்லி இருக்கிறது. ஒருமித்த கருத்து இல்லை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் ஒருமித்த கருத்தை எட்டவில்லை, மேலும் தேசிய அளவில் எதிர்க்கட்சியான இந்திய அணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற உள்ள ஹரியானா தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக பல தேர்தல்களில் தொடர்ந்து வென்று வரும் தொகுதிகளை மட்டுமே ஆம் ஆத்மிக்கு விட்டுத் தரக் காங்கிரஸ் சம்மதித்ததாக தெரிகிறது. இரு தரப்புமே இறங்கி வரவில்லை. அடுத்து என்ன: பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஆம் ஆத்மி தனியாக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டது. இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி தீபேந்திர ஹூடா கூறுகையில், “இரு தரப்பிற்கும் சாதகமாக இருந்தால் மட்டுமே கூட்டணி என்பதில் தெளிவாக இருந்தோம். ஆம் ஆத்மி மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் தான் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இது எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஹரியானா மாநிலம் இப்போது மிக மோசமான நிலையில் உள்ளது. வேலை இல்லாமல் திண்டாடும் இளைஞர்கள் அதிகம் உள்ள மாநிலம் ஹரியானா தான். குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் ஹரியானா தான். இப்படி மாநிலத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அதை முன்வைத்து நாங்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்வோம்” என்றார். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block