காதலுக்கு ரெட் கார்டு.. தற்கொலைக்கு முயன்ற பெண் தண்டவாளத்தில் செய்த செயல்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட் Updated: Wednesday, September 11, 2024, 17:07 [IST] பீகார்: பீகார் மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் தண்டவாளத்தில் செய்த செயலால் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் குடும்பத் தகராறு காரணமாக அப்பெண் தற்கொலை செய்ய வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அப்பெண் காதல் விவகாரத்தை வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது ரயில் போக்குவரத்து. இந்தப் போக்குவரத்து பயணிகள் போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், உணவுப் பொருள்கள், வாகனங்கள் கொண்டு செல்வது உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் பயணத்தின் மூலமாக தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகின்றனர். அதே நேரத்தில், ரயில் தண்டவாளங்களில் தலை வைத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது ஒரு தீர்வாக அமையாது. இந்நிலையில், பீகார் மாநிலத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது தண்டவாளத்திலேயே படுத்து உறங்கியுள்ளார். இதனை கவனித்த ரயிலின் லோகோ பைலட் சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அப்பெண்ணை காப்பாற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம், மோதிஹரி என்ற மாவட்டத்தில் உள்ளது சகியா ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்துக்குள் வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு வந்து ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்துள்ளார். காத்திருந்து, காத்திருந்து பார்த்த அந்த மாணவி வெகு நேரமாகியும் ரயில் வராததால் ஒருகட்டத்தில் தண்டவாளத்திலேயே தூங்கியுள்ளார். இந்நிலையில், மோதிஹிரியில் இருந்து முசாபர்பூர் நோக்கிச் செல்லும் ரயில் அந்த ரயில் தடத்தில் வந்துள்ளது. அப்போதும் அந்த மாணவி தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, தண்டவாளத்தில் பெண் ஒருவர் படுத்துள்ளதைப் பார்த்த ரயிலின் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் தலை அருகேயே சென்று ரயிலின் சக்கரமும் நின்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வேக வேகமாகச் சென்ற லோகோ பைலட் மற்றும் பயணிகள் அப்பெண்ணை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அங்கிருந்து செல்ல அப்பெண் மறுத்து அடாவடி செய்துள்ளார். நான் சாக வேண்டும் என்று கூறி அங்கேயே நின்றுள்ளார். எனக்குன்னே வருவீங்களாடா என்பதுபோல் ஒருகட்டத்தில் அப்பெண் டென்சன்படுத்தவே அங்கிருந்தவர்கள் அப்பெண்ணிடம் சமாதானம் பேசியுள்ளனர். முதலில் குடும்பத் தகராறு காரணமாக அப்பெண் தற்கொலை செய்ய வந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில், அப்பெண் காதல் விவகாரத்தை வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் தற்கொலைக்கு முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. ஒருகட்டத்தில் நடந்ததைக் கூறிய அப்பெண், குடும்பப் பிரச்னை காரணமாக மிகவும் கடுமையான மன அழுத்தத்தில் நான் உள்ளேன். நான் ஒருவரைக் காதலிக்கிறேன். ஆனால், எனது காதலை பெற்றோர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால்தான் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். என்னை எதற்காக காப்பாற்றினீர்கள்.. இதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று கேட்டு அழுகத் தொடங்கியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி ஒருவழியாக ரயில் தண்டாவளத்தில் இருந்து அப்பெண்ணை அப்புறப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று நெட்டிசன்கள் கமெண்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர். உலகில் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 7 லட்சத்துக்கும் அதிகம் பேர் தற்கொலை செய்து இறக்கின்றனர். தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் தோன்றினால் அரசின தற்கொலை தடுப்பு உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழக சுகாதார சேவை உதவி மையம் – 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044-24640050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block