குழந்தைகளை அசையும் சொத்தாக கருதக்கூடாது.. அத்தை கிட்டயே இருக்கட்டும்.. சுப்ரீம் கோர்ட் போட்ட போடு Updated: Sunday, September 8, 2024, 18:51 [IST] போபால்: தாய், தந்தையை இழந்த குழந்தையின் வளர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அத்துடன் மத்திய பிரதேசம் கோர்ட்டின் விசாரணையையும் விமர்சித்திருக்கிறது. என்ன நடந்தது? ஒரு திருமண பந்தம் முடிவுக்கு வரும்போது, அதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது அந்த தம்பதியினிரின் குழந்தைகள்தான். தம்பதியர் 2 பேரும் சேர்ந்து முடிவெடுத்து விவாகரத்தும் பெற்றுவிட்டால், குழந்தை யாரிடம் வளர வேண்டும்? என்பது கவனிக்கப்பட விஷயமாகும்.. இதில் குழந்தை யாரிடம் வளர்வது பாதுகாப்பாக இருக்கும்? வசதியாக இருக்கும் என்றெல்லாம் அறிந்து, குழந்தையின் நலன் கருதி, நீதிமன்றமே முடிவுகளை எடுக்கும். இதற்கு பிறகே தாயிடமோ அல்லது தந்தையிடமோ குழந்தை ஒப்படைக்கப்படும்.. பிறகு மற்றொருவர், அந்த குழந்தையை, “குழந்தை அணுகுதல் மற்றும் பார்வையிடம் வழிகாட்டுதல்கள்” விதிப்படி சந்தித்து கொள்வார்கள். தம்பதி: ஆனால், மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அந்த தம்பதி.. இவர்களுக்கு ஒரே குழந்தை. உடல்நலக்குறைவால் கணவன் இறந்துவிட்டதால், குழந்தையை அப்பெண் வளர்த்து வந்தார்.. ஆனால், கடந்த 2022ல் அந்த பெண்ணும் இறந்துவிட்டார். அப்போது அந்த குழந்தைக்கு 11 மாதம். அப்பா, அம்மா இருவருமே இல்லாமல் நிராதரவாக நின்ற அந்த குழந்தை, தாய்வழி அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறது.. எனினும், இந்த குழந்தையை அப்பா வழி தாத்தா - பாட்டியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய பிரதேசம் ஹைகோர்ட் உத்தரவிட்டது. எனவே, எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அசையும் சொத்து: இந்த மேல்முறையீட்டு வழக்கானது, நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் ஏ.ஜி. மசிஹ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இருப்பு வாதங்களையும் வைத்து கூறும்போது, “ஒரு மைனர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவை கையாளும் நீதிமன்றங்கள், குழந்தையை அசையும் சொத்தாக கருதி, அது தொடர்பான பிரச்சனைகளை ஆராயாமல், அதன் இருப்பிடத்தை மாற்ற உத்தரவிடக் கூடாது. இந்த வழக்கில் மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றம், குழந்தையின் நலன் குறித்த பிரச்னையை பரிசீலிக்காதது வெளிப்படையாக தெரிகிறது. குழந்தையின் பாதுகாப்பையும் நீதிமன்றம் சீர்குலைத்துள்ளது. குழந்தை ஒரு வருடமாக அப்பா, தாத்தா பாட்டியை பார்க்கவில்லை. அத்தை பொறுப்பு: குழந்தையை உடனடியாக தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு மாற்றினால், அத்தை இல்லாததால் குழந்தை சோர்வாகிவிடும்.. அது மிகவும் பரிதாபத்துக்குரியது.. இதுவரை கடந்த 2 வருடங்கள், 7 மாதங்களாக அத்தையின் பொறுப்பில் குழந்தை வளர்ந்து வருகிறது.. அங்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.. இனியும், அங்கேயே அக்குழந்தை இருக்கலாம். அப்பா, மற்றும் அவரது வழி தாத்தா, பாட்டி ஆகியோர் வரும் 21ம் தேதி முதல் மாதந்தோறும் 1 மற்றும் 3வது சனிக்கிழமைகளில் குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block