சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்டுவதாக எதிர்ப்பு- இந்து அமைப்புகள் போராட்ட அறிவிப்பால் பதற்றம்! Published: Wednesday, September 11, 2024, 10:40 [IST] சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்படுவதாக குற்றம்சாட்டி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்ட அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் இன்று மீண்டும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. சர்ச்சைக்குரிய மசூதி கட்டும் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிம்லாவின் சஞ்சவுலி தல்லி சுரங்கப் பாதை அருகேதான் சர்ச்சைக்குரிய மசூதி கட்டப்பட்டு வருகிறது. இந்த மசூதி சட்டவிரோதமாக கட்டப்படுகிறது; இதனை ஆளும் காங்கிரஸ் அரசு வேடிக்கைப் பார்க்கிறது என்பது இந்து அமைப்புகளின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு குறித்து ஆளும் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இன்று சஞ்சவுலி மசூதிக்கு முன்பாக போராட்டம் நடத்தப் போவதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிம்லா எஸ்பி சஞ்சீவ் குமார் கூறுகையில், சஞ்சவுலி பகுதியில் நேற்று இரவு அமைதியை நிலைநாட்ட கொடி அணிவகுப்பு நடத்தினோம். தற்போதும் பெரும் எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் தீவிரமாக கண்காணிப்போம். வன்முறையில் ஈடுபடக் கூடிய சிலரை அடையாளம் கண்டு எச்சரித்துள்ளோம். சட்டத்தை கையில் எடுத்து யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார். மேலும் சமூக வலைதளங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப சாத்தியம் இருக்கிறது. சிம்லா அமைதியான நகரம். சிம்லாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த தொல்லையும் தந்துவிடக் குடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆகையால் அனைத்து தரப்பும் அமைதியை உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் சஞ்சீவ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி மீது கடும் அதிருப்தி இருந்து வரும் நிலையில் மசூதி விவகாரம் பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இந்து அமைப்புகள் இதே பிரச்சனைக்காக போராட்டம் நடத்திய நிலையில் இன்று மீண்டும் போராட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block