ஜம்மு காஷ்மீர் பகீர்- பொறியாளர் ரஷீத் எம்பி கட்சியுடன் ஜமாத் இ இஸ்லாமி மாஜி தீவிரவாதிகள் கூட்டணி! Updated: Sunday, September 15, 2024, 19:14 [IST] ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹாத் கட்சியுடன் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி (ஜேஇஐ) இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டணி அமைத்துள்ளது மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் பிரதான அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் களமாடும் நிலையில் கணிசமான எண்ணிக்கையில் பிரிவினைவாதிகள், பிரிவினைவாத ஆதரவாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது சிறப்பு அந்தஸ்து வழங்கியது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் களம் காண்கின்றன. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் பிரிவினையை ஆதரிக்கும் சக்திகளும் களம் காண்கின்றன. ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் அவாமி இதிஹாத் கட்சி கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. அவாமி இதிஹாத் கட்சியின் தலைவர் பொறியாளர் ரஷீத், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்த வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். லோக்சபா தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவைத் தோற்கடித்தவர். இந்த தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பொறியாளர் ரஷீத் எம்பியை, பாஜகவின் பி டீம் என காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சிகள் முத்திரை குத்துகின்றன. ஆனால் ரஷீத் எம்பியோ, பாகிஸ்தான் கட்டுப்பாட்டு காஷ்மீரில் உள்ள காஷ்மீரிகளையும் இணைத்துதான் ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கிறார். இந்த பின்னணியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் தடை செய்யப்பட்ட ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்த இயக்கம் தற்போது ரஷீத் எம்பியின் இதிஹாத் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block