தாலி கட்டும் நேரத்தில்.. காதலன் செய்த காரியம்.. ஆடிப்போன பெண் வீட்டார்! திருத்தணியே ஆடிப்போச்சு Updated: Monday, September 16, 2024, 16:37 [IST] திருத்தணி: திருத்தணியில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் பாதியில் நின்றது. 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், சரியாக தாலிகட்டும் முன்பு மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிரபல தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது பேங்கில் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் பெற்றோர் நம் திருமணத்திற்கு சம்மதிப்பார்களோ மாட்டார்களோ என ஐயத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் இருவர் வீட்டிலும் திருமண பேச்சு எழுந்துள்ளது. இதனால் இனி நம் காதலை வீட்டில் மறைக்க வேண்டாம், சொல்லிவிடுவோம் என இருவரும் முடிவெடுத்துள்ளனர். அதன்படி தங்களது காதல் விவகாரத்தை வீட்டில் சொல்லியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதோடு திருமணத்திற்கு நாளையும் குறித்தனர். இதன்பின்னர் இருவீட்டு சார்பிலும் திருமண வேலைகள் தடல்புடலாக நடந்தது. பத்திரிக்கை அடித்து உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து வந்தனர். திருமணத்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்த இருந்தனர். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்தது. நேற்று முன் தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்துகொண்டனர். மணமகன் குமாரும் – மணப்பெண்ணையும் வாழ்த்தினர். நேற்று காலை 7.30 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது. இருவீட்டு சொந்த பந்தங்கள் எல்லாரும் திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு மணமகன் குமார் ஓய்வு எடுப்பதற்காக தனது அறைக்கு சென்றார். இதையடுத்து காலையில் முகூர்த்தத்திற்கு மாப்பிள்ளை இன்னும் தயார் ஆகவில்லையா என்று அவரது அறையை தட்டியுள்ளனர். திறக்காததால் உள்ளே சென்று பார்த்தபோது மாப்பிள்ளை குமாரை காணவில்லை. இதையடுத்து மண்டபம் முழுவதும் அவரை தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் திருமணம் பாதியில் நின்றது. பெண் வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து மணப்பெண் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பெற்றோரின் தூண்டுதலின் பேரில் திருமண மண்டபத்தில் இருந்து ஓடிய காதலன் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் நடக்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block