துப்பாக்கி பட ஷூட்டிங் பாணியில்.. ஒரே நேரத்தில் வெடித்த பேஜர்கள்.. ஹிஸ்புல்லாவை கதற விட்ட இஸ்ரேல் Updated: Wednesday, September 18, 2024, 11:29 [IST] பெய்ரூட்: ஹிஸ்புல்லா இயக்கத்தை ஒரே நாளில் கதி கலங்க வைத்துள்ளது இஸ்ரேல். துப்பாக்கி படத்தில் ஒரே நேரத்தில் 12 தீவிரவாதிகளை விஜய் மற்றும் கேங்க் சுடும் காட்சி பலருக்கும் நினைவு இருக்கும். அந்த காட்சி போலவே.. ஒரே நேரத்தில்.. சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் யாரும் நேரடியாக களத்திற்கு செல்லவில்லை. குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லை. இருந்த இடத்தில் இருந்தே சொல்லி வைத்தார் போல ஹிஸ்புல்லா இயக்கத்தினரை அடித்து நொறுக்கி உள்ளது. எப்படி நடந்தது? வாருங்கள் பார்க்கலாம். யார் இந்த ஹிஸ்புல்லா? சின்ன விளக்கம்: லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம் ஈராக்கின் குடையின் கீழ் வாழும் பெரிய அரசியல் இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அமெரிக்கா கூறுவது உண்டு. இஸ்ரேலில் அவ்வப்போது பாலஸ்தீனம் நடத்தும் தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா முக்கிய காரணம். உதாரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் உள்ளே புகுந்து ஹமாஸ் இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்கத்திற்கு ஆயுத உதவிகள் தொடங்கி உளவு உதவிகள் வரை செய்தது ஹிஸ்புல்லா இயக்கம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கத்தை அவ்வப்போது இஸ்ரேலின் படைகள் தாக்குவது உண்டு. பாலஸ்தீன போர் மட்டுமின்றி சவுதியுடன் மோதல் தொடங்கி ஹிஸ்புல்லா இயக்கம் பல போர்களை மேற்கொண்டு வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கம் ஈராக்கின் குடையின்கீழ் வளர்ந்து நிற்கும் உலகின் மிகப்பெரிய இயக்கங்களில் ஒன்றாகும். என்ன நடந்தது?: லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கம் பயன்படுத்தும் பேஜர்கள் வெடித்துள்ளன. பேஜர் என்றால் என்ன என்று தெரியாத 2கே கிட்ஸ்களுக்கு. இது ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட மெசேஜிங் கருவி. பேஜர் – பேஜர் இடையே மெசேஜ் செய்ய கூட இயந்திரம் இது. இதை ஒட்டுக்கேட்க முடியாது என்பதால் ஹிஸ்புல்லா இதை பயன்படுத்தி வந்தது. பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு கையடக்கமாக இருக்கும் இந்த பேஜர்கள்தான் வெடித்து உள்ளன. லெபனான் முழுக்க பேஜர் வைத்து இருந்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 2800 பேர் காயம் அடைந்துள்ளனர். 9 பேர் பலியாகி உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் இரண்டு ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர்களின் மகன்கள். ஹிஸ்புல்லா உறுப்பினர் ஒருவரின் மகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் லெபனானுக்கான ஈரான் தூதர் மொஜ்தபா அமானியும் அடங்குவார். பலருக்கும் பாக்கெட்டில் இருந்த பேஜரில் முதலில் புகை வந்துள்ளது. அதை எடுத்து பார்க்கும் முன் வெடித்துள்ளது. சிலர் பேஜர் வெடிக்கிறது என்று எச்சரிக்கை மெசேஜ் அனுப்பும் முன்பே.. அதை எடுத்து பார்க்கும் போதே முகத்திற்கு நேராக வெடித்துள்ளது. நாடு முழுக்க கிட்டத்தட்ட 1 மணி நேர இடைவெளியில் இந்த பேஜர்கள் வெடித்துள்ளன. பலருக்கும் பாக்கெட்டில் இருந்த பேஜர்தான் வெடித்துள்ளது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. எப்படி நடந்தது? யார் செய்தது?; 1. இஸ்ரேல்தான் இதை செய்தது என்று ஹிஸ்புல்லா குற்றஞ்சாட்டி உள்ளது. இஸ்ரேல் நேரடியாக இதற்கு பொறுப்பேற்கவில்லை. 2. பேஜர் கருவிகளை ஹேக் செய்து அதன் பேட்டரிகளை ஓவர் ஹீட் ஆக வைத்து வெடிக்க வைத்து இருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர். 3. ஆனால் இந்த வெடிப்புகள் பேட்டரி ஹீட் மூலம் ஏற்படும் வெடிப்புகள் அல்ல. அதனால் விற்பனைக்கு முன்பே இதில் ஹேக் செய்துள்ளனர். 4. அதாவது ஹிஸ்புல்லா அமைப்பிடம் செல்லும் முன்பே.. அதை உருவாக்கும் இடத்திலேயே மாற்றி அல்லது அதில் டெட்டனேட்டர்களை வைத்து.. இப்போது வெடிக்க வைத்து இருக்கிறார்கள். இதுதான் ஒரே வாய்ப்பு என்று உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 5. இதற்கு பேஜரில் ஒரு சாப்ட்வேர் வைக்க வேண்டும். இதை எல்லாம் செய்ய முன்பே முறையாக திட்டமிட்டு இருக்க வேண்டும். எனவே இது நீண்ட கால பிளானாக இருக்கலாம் என்கிறார்கள். இது உண்மையிலேயே அப்படி இரு தாக்குதலாக இருந்திருந்தால், ஏதோ ஒரு வகையில் பேஜர்களை ரகசியமாகச் சிதைக்கும் ஒரு பெரிய நடவடிக்கையில் இஸ்ரேல் ரகசியமாக ஈடுபட்டிருக்கும். 6. 10 முதல் 20 கிராம் இராணுவ தர உயர் வெடிமருந்து பேஜரின் உள்ளே போலி மின்னணு பாகத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 7. ஒரு மெசேஜ் இதற்கு அனுப்பி அதன் மூலம் இதை வெடிக்க வைத்து இருக்கலாம். ஒரே நேரத்தில் இப்படித்தான் அதே பேஜர்கள் வெடித்துள்ளன என்று கூறப்படுகிறது. रवनीत सिंह बिट्टू का राहुल गांधी पर बड़ा बयान, कहा-‘पप्पू अभी पप्पू ही है, पता नहीं किसके हाथों में खेल रहा’ Quad समिट के लिए तीन दिनों के अमेरिका दौरे पर रहेंगे PM मोदी, यूएन महासभा को करेंगे संबोधित ‘सच्ची भक्ति और राजनीति के लिए धर्म के दुरुपयोग……’: कांग्रेस का पीएम मोदी पर पलटवार Russian Army Discharged Indians: रूसी सेना में शामिल 45 भारतीयों को छुट्टी, 50 और को बचाने की कवायद ‘आज का भारत आने वाले 1000 साल का आधार तैयार कर रहा’, गुजरात में बोले पीएम मोदी, बताया आगे का प्लान गुजरात में बोले पीएम मोदी, कहा-‘विपक्ष ने मेरा मजाक उड़ाया, लेकिन मैं सरकार के 100 दिन के एजेंडे में लगा रहा’ Kolkata News: ममता सरकार से उठा डॉक्टरों का भरोसा, न्याय के लिए अब राष्ट्रपति और प्रधानमंत्री को लिखा पत्र ‘अब हमारी प्राथमिकता देश का आदिवासी’, चुनाव से पहले PM मोदी ने झारखंड में भरी हुंकार, दी कई सौगातें PM Modi: 17 सितंबर को पीएम मोदी करेंगे भुवनेश्वर का दौरा, स्कूल-कॉलेज रहेंगे बंद ‘कांग्रेस का शाही परिवार भारत का सबसे बड़ा भ्रष्ट राजवंश’, डोडा में PM मोदी का तीखा हमला Rajasthan: प्रधानमंत्री नरेंद्र मोदी ने पैरा ओलंपिक के बीकानेर के इस खिलाड़ी से जब की चर्चा, जानिए क्या ? पैरालंपिक गोल्ड विजेता नवदीप की पीएम मोदी से मुलाकात, कैप पहनने के बाद पूछा ऐसा सवाल कि सब हंसने लगे Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block