நீதிபதியின் அதிரடி.. பெண்ணை பயமுறுத்தியோ, பொய் வாக்குறுதி தந்தோ, உடலுறவு கொண்டால் அது பலாத்காரமே Updated: Monday, September 16, 2024, 19:42 [IST] கான்பூர்: பாலியல் புகார் ஒன்றில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று பலரது கவனத்தையும் திசை திருப்பி உள்ளது.. நீதி கேட்டு நீதிமன்றம் சென்ற இளைஞருக்கு, சரியான உத்தரவை ஹைகோர்ட் அளித்திருக்கிறது. பாலியல் புகார்கள் குறித்து நீதிமன்ற தீர்ப்புகள் ஒவ்வொன்றும் பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநில நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வெளியாகியிருந்தது. ஆடைகள்: இந்த சம்பவம் 1991-ல் நடந்துள்ளது.. ராஜஸ்தான் டோங்க் மாவட்டத்தை சேர்ந்த சுவலால் என்பவருக்கு அப்போது 26 வயதாகியிருந்தது. வாட்டர் பூத் ஒன்றில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கி சென்று சிறுமியின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி உள்ளார்.. இதனால் பயந்துபோன சிறுமி அலறி கூச்சலிடவும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டுவிட்டனர்.. இதையடுத்து, சுவலாலை கைதாகி சிறையிலடைக்கப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் ஹைகோர்ட்டில், 33 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், “சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாணப்படுத்துவது பாலியல் பலாத்கார முயற்சி கிடையாது. சட்டப்பிரிவு 376 மற்றும் 511 பிரிவுகளின் கீழ் இந்த குற்றச்சாட்டு வராது. பாலியல் பலாத்கார முயற்சி என்றால், அதையும் தாண்டி செய்திருக்க வேண்டும்… அப்படி எதுவுமே நடக்கவில்லை.. எனவே, ஐபிசி 354-ன்படி மானப்பங்கப்படுத்துதல் பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றுகூறி, அந்நபர் மீதான பாலியல் பலாத்கார முயற்சி வழக்கை ரத்து செய்தது நீதிமன்றம் உள்ளாடையை கழற்றி நிர்வாணம் ஆக்குவது, பலாத்கார முயற்சி ஆகாது என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை அன்றைய தினம் ஏற்படுத்தியிருந்தது. அதேபோல, 2 மாதங்களுக்கு முன்பு, சமீர் ராய் என்பவர், ஒரு பெண்ணிடம் செல்போன் நம்பரையும், அட்ரஸ் என்ன? என்றும் கேட்டாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், போலீஸ், கோர்ட் என்று போய்விட்டார். FIR பதிவு: இது தொடர்பான வழக்கை விசாரித்த குஜராத் ஹைகோர்ட் நீதிபதி நிர்சார் தேசாய், “யாராவது உங்கள் செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டால், அது உங்களை புண்படுத்தலாமே தவிர, அதுக்காக எப்ஐஆர் போடும் அளவுக்கு செல்ல தேவையில்லை.. எப்ஐஆர் போடும் அளவுக்கு அது அவ்வளவு பெரிய குற்றமுமில்ல. போன் நம்பர் கேட்டது, இளைஞரின் பொருத்தமற்ற செயல்தான். அதுக்காக பாலியல் துன்புறுத்தலில் அதை சேர்க்க முடியாது” என்று கூறி, சமீர் ராய்க்கு விடுதலை தந்திருந்தார். இந்த தீர்ப்பும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதோ இன்னொரு பாலியல் விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. அலகாபாத்தை சேர்ந்த் ராகவ் குமார்.. இவர் மீது இளம்பெண் ஒருவர், பாலியல் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரை தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி ராகவ் குமார், அலகாபாத் கோர்ட்டை நாடினார். பொய்யான வாக்குறுதி: இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.. அப்போது நீதிபதி இதுகுறித்து கூறும்போது, “ஒரு பெண்ணை பயமுறுத்தி அல்லது பொய்யான வாக்குறுதி கொடுத்து உடலுறவு கொண்டாலும் அது பாலியல் வன்கொடுமைக்கு தான் சமம்.. அந்த பெண்ணை பயமுறுத்தி அல்லது பொய்யான வாக்குறுதி கொடுத்து உடலுறவுக்கு சம்மதிக்க வைப்பதும் குற்றம்தான்.. எனவே, இது அப்பட்டமான பாலியல் வன்கொடுமை தான்” என்று தீர்ப்பு வழங்கி, ராகவ் குமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் பின்னணி இதுதான்: கடந்த 2018ல் பதியப்பட்ட வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண் சுயநினைவு இல்லாத நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர், திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தொடர்ந்து பல முறை பாலியல் உறவு வைத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.. எனவே, அந்த நபர் மீது சட்டப்பிரிவு 376ன் கீழ் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டது. விசாரணை: இதனால் குற்றம் சாட்டப்பட்ட நபர், தன்மீதான குற்றப்பத்திரிகையை எதிர்த்து, அலகாபாத் ஹைகோர்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “பெண்ணின் அனுமதியுடன்தான் இந்த பாலியல் உறவில் இருந்ததாகவும், இது பலாத்காரத்தின் கீழ் வராது ” என்றார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞரோ, இந்த வாதத்தை மறுத்தார்.. 2 பேரும் இடையிலான உறவு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதன் மூலம் தொடர்ந்துள்ளது” என்று வாதிட்டார். உத்தரவு: இந்த 2 தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ” இந்த உறவு பெண் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளபடி ஏமாற்றியும் மிரட்டல் மூலமும் நடந்துள்ளது… பெண்ணின் அனுமதியுடனேயே இருவருக்கும் இடையில் பாலியல் உறவு இருந்தாலும், அது பெண்ணை பயமுறுத்தியும், தவறாக வழிநடத்தியும் இருக்குமாயின், பலாத்காரத்துக்கான சட்டப்பிரிவு 376-ன் கீழ் வரும்.. எனவே, இந்த வழக்கு தொடர்பாக பலாத்காரம் என்ற முகாந்திரத்திலேயே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டதுடன், அந்த நபரின் மனுவையும் தள்ளுபடி செய்தார். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block