மீனில் பெஸ்ட் ஹில்சா மீன்.. டக்னு நிறுத்திடுச்சே பங்களாதேஷ்.. அப்ப நமக்கு ஹில்சா மீன்கள் கிடைக்காதா? Published: Tuesday, September 10, 2024, 15:31 [IST] கொல்கத்தா: துர்கா பூஜைகள் நெருங்கி வரும் நேரத்தில், ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்திருக்கிறது.. இது பக்தர்கள் தரப்பிலும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.. இந்த மீன் தடைக்கு என்ன காரணம் ? ஹில்சா மீன்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹில்சா மீன்கள் என்றால் என்ன? இதன் பலன்கள் என்ன? மருத்துவ குணங்கள் என்ன என்று முதலில் பார்ப்போம். நல்ல கொழுப்பு: இலிஷா என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஹில்சா மீனில், நல்ல கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.. முக்கியமாக இந்த மீனிலுள்ள ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலமானது, மனிதர்களுக்கு இதய நோய்களை தடுக்கக்கூடியதாக உள்ளது.. வைட்டமின் A, D, போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.. சில வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய வங்காள விரிகுடா கடல் பகுதியில் இந்த மீன்கள் நிறைய இருந்ததாம்.. ஆனால், அதிகப்படியான நுகர்வு மற்றும் தேவைகளின் அதிகரிப்பு காரணமாக, ஹில்சா மீன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமாக குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த ஹில்சா மீன்களுக்கு டிமாண்டு அதிகம். ஹில்சா மீன்களின் விலையும் அதிகமாகவே இருக்கும்.. கிலோ, 1,200 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை விற்கப்படுவதாக சொல்கிறார்கள். மீன்களின் ராணி: மீன்கள் சந்தையில் இந்த மீனுக்கு மட்டும் கிராக்கி அதிகம்.. அதனால்தான், இதனை “ஆற்று மீன்களின் ராணி” என்று சொல்வார்களாம்.. என இது அழைக்கப்படுகிறது. கோவா, கேரளா, அசாம், திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம், தமிழக கடலோர பகுதிகளில், ஹில்சா மீன்கள் கிடைக்கின்றன.. இந்த வகை மீன்கள் மிகவும் வேகமாக நகருமாம்.. இதற்கு நிறைய ஆக்சிஜன் தேவைப்படும்.. அந்தவகையில், கங்கை, பிரம்மபுத்ரா, அரபிக்கடல், குஜராத், பாகிஸ்தானின் சிந்து நதிகள் வரை இந்த மீன்கள் காணப்படுகின்றன.. பொதுவாக, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஹில்சா மீன்களின் வரத்து நதிகளில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. துர்கா பூஜை: வடமாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது இந்த ஹில்சா மீன்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.. இந்நிலையில், வங்கதேசத்தில் நிலைமையே இபோது தலைகீழாக மாறிவிட்டதால், ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய அங்குள்ள இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியின்போது அந்த நாட்டு அரசானது, இந்தியாவிற்கு வருடந்தோறும் பண்டிகை காலங்களில் அதாவது, ஆகஸ்ட் முதல் அக்டோபர் காலகட்டத்தில், ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்து வந்தது… அதனால், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, ஹில்சா மீன்கள் தங்குதடையின்றி கிடைத்து வந்தது. மியான்மர்: இந்தியாவில் விற்பனையாகும் 70 சதவீத ஹில்சா மீன்கள் வங்கதேசத்தில் இருந்துதான் நமக்கு கிடைத்து வருகிறது. இந்த மீன்கள் மியான்மர் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படும்.. ஆனால், இப்போது ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வங்கதேசத்தின் இடைக்கால அரசு தடை விதித்துவிட்டது.. ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால் ஹில்சா மீனுக்கான தட்டுப்பாடும் நிலவ வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். ஹில்சா மீன்களை இறக்குமதி செய்யாவிட்டால், வேறு எந்த பொருளையும் அங்கிருந்து நாம் வாங்க கூடாது என்று இணையத்தில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block