வங்கதேசத்தில் துர்கா பூஜைக்கு கட்டுப்பாடு.. உத்தரவிட்ட ஜஹாங்கீர் ஆலம் யார் தெரியுமா? ஷாக் பின்னணி Published: Saturday, September 14, 2024, 11:16 [IST] டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாட இந்துக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கட்டுப்பாடுகளை உள்துறை விவகாரத்துறை அட்வைசராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி விதித்துள்ளார். இந்நிலையில் தான் அந்த ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். இந்நிலையில் தான் முகமது யூனுஸ் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவை எதிர்க்கும் மற்றும் விமர்சனம் செய்பவர்களுடன் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு ஒருங்கிணைந்து செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தபோது இந்துக்களின் வீடு, கடைகள், கோவில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். மோடிக்கு போன் போட்டு பேசிய முகமது யூனுஸிடமும் சிறுபான்மையாக உள்ள இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். இத்தகைய சூழலில் தான் அடுத்த மாதம் துர்கா பூஜை கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் மாதம் 9 ம் தேதி அக்டோபர் 13ம் தேதி வரை இந்த பூஜை கொண்டாடப்பட உள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் துர்கா பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் தான் துர்கா பூஜைக்கு வங்கதேசத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் வேளை மற்றும் Azaan வேளைகளில் துர்கா பூஜை கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும். இந்த வேளையில் துர்கா பூஜை, பக்தி பாடல்கள் தொடர்பான ஒலிபெருக்கிகளை ஒலிக்க விடக்கூடாது. மேள தாளங்கள் முழங்க கூடாது என கண்டிஷன் போடப்பட்டுள்ளது. இத்தகைய கண்டிஷன் போடுவது வங்கதேசத்தில் இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதனால் வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை சிலர் எழுப்பி உள்ளனர். இதற்கிடையே தான் இந்த உத்தரவை பிறப்பித்தவர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது துர்கா பூஜைக்கு கட்டுப்பாடுகளை அந்த நாட்டின் உள்துறை விவகாரத்துறை அட்வைசராக உள்ள ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி தான் விதித்துள்ளார். இவர் யார் என்றால் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இடைக்கால அரசு அமைந்த பிறகு உள்துறை ஆலோசகராக இருந்த எம் சகாவத் ஹூசைனுக்கு பதில் ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி அந்த பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். இவர் வங்கதேசத்தின் எல்லை காவல் படையில் முன்னாள் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றினார். இவர் இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தவர். எல்லை காவல் படையில் அவர் பணியாற்றியபோது வங்கதேசத்தை இரண்டாக உடைக்கும் நோக்கத்தில் 90 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார். கடந்த 2005ம் ஆகஸ்ட் 17 ம் தேதி வங்கதேசத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். இவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்ட போதே இந்தியாவில் விவாதமானது. ஏனென்றால் ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி தான் அந்த நாட்டின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிப்பார். இதனால் இந்தியா மீது பகீர் குற்றச்சாட்டுகளை வைக்கலாம் என்றும், சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு எதிராக அவர் செயல்படலாம் என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது துர்கா பூஜைக்கு அவர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block