பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த விமானப் படை விங் கமாண்டர்! இயற்கைக்கு மாறான உறவுக்கு அழைப்பு: புகார் Updated: Wednesday, September 11, 2024, 9:34 [IST] ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பார்ட்டிக்கு பிறகு அழைத்து சென்று விங்க் காமாண்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக விமானப்படையின் பெண் அதிகாரி பரபரப்பான புகார் அளித்துள்ளார். விங்க் கமாண்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நம் நாட்டின் பாதுகாப்பில் தரைப்பட, கப்பற்படை, விமானப்படை என முப்படைகளின் பங்கும் மிகப்பெரியது. பாகிஸ்தானிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் விமானங்கள் தயார் நிலையில் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண் அதிகாரிகள் இந்த விமானப்படை தளத்தில் பணியில் உள்ளனர். இந்நிலையில் தான் விமானப்படை தளத்தில் விங்க் கமாண்டராக பணியாற்றி வருபவர் மீது பரபரப்பான பலாத்கார புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை கொடுத்தது வேறு யாருமில்லை. ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமானப்படை பெண் அதிகாரி தான். இந்த பெண் அதிகாரி புத்காம் போலீஸ் நிலையத்தில் தான் பாலியல் பாலத்கார புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் , ‛‛கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது நடத்தப்பட்டது. அதிகாரிகளின் மெஸ்ஸில் இந்த கொண்டாட்டம் நடந்தது. அப்போது விங்க் காமாண்டர் தனது அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு மனஉளைச்சல் தந்தார். என்னை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தார். வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுமாறு வலியுறுத்தினார்” என கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் சட்டப்பிரிவு 376 (2) (படைப்பிரிவில் பணிபுரியும்போது பாலியல் பலாத்காரம் செய்தல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். அதேபோல் இந்திய விமானப்படை சார்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான விங்க் கமாண்டருக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வழக்குப் பதிவு செய்வதற்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று அந்த பெண் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். Latest Updates Block for 8 hours Block for 12 hours Block for 24 hours Don’t block